Lyrics

ராமன் தம்பியும், ராவணன் மகனும் மோதுகின்றப் போராட்டம் இந்த பூமி நடுங்குது, வானம் நடுங்குது எங்கே முடியும் என்று போராட்டம், சத்திய போராட்டம் இது நியாயம் நீதிகள், பாச பந்தங்கள் மோதும் போர்க்களம் ஆகும் மோதும் போர்க்களம், மோதும் இருவரின் வீரம் இணையற்றதாகும் வீரம் என்பதும், நியாயம் என்பதும், உடலும் உயிரும் போலே இதில் வீரம் வெல்லுமா, நியாயம் வெல்லுமா, தெரிந்துவிடும் இந்நாளே போராட்டம், சத்திய போராட்டம் போராட்டம், சத்திய போராட்டம் ராமன் தம்பியும், ராவணன் மகனும் மோதுகின்றப் போராட்டம் இந்த பூமி நடுங்குது, வானம் நடுங்குது எங்கே முடியும் என்று போராட்டம், சத்திய போராட்டம் பழிவாங்கும் எண்ணமும், நேர்மை உள்ளமும் மோதும் போர்க்களம் ஆகும் நல்ல வீரம் உள்ளவர், கள்வர் போலவே ஜாலம் செய்வது ஏனோ? தன் நேர்மை எண்ணங்களை வானமாக்கினால், போரில் தோல்விகள் ஏது இங்கு வெல்லும் சக்திகள், சூழ்ச்சிகள் செய்தால் வெல்லுவதே முடியாது போராட்டம், சத்திய போராட்டம் போராட்டம், சத்திய போராட்டம் (ராமன் தம்பியும்) ராவணன் மகனும் மோதுகின்றப் போராட்டம் இந்த பூமி நடுங்குது, வானம் நடுங்குது எங்கே முடியும் என்று போராட்டம், சத்திய போராட்டம் போராட்டம், சத்திய போராட்டம் அடங்காத சினம் கொண்ட மேகநாதன் லட்சுமணன் மீது பிரம்மாஸ்த்திரம் விடுத்தான் பாய்ந்துவரும் அஸ்திரத்தை, பணிவுடன் லட்சுமணன் வணங்கி நின்றான் பிரம்மனும் ஆசி தந்தான் பிரம்மாஸ்த்திரம் திரும்பியது என்ன ரகசியம், என்ன மாயை என்று இந்திரஜித்தன் திகைத்து நின்றான் பாஷுபதாஸ்திரத்தை, லட்சுமணன் மேல் இந்திரஜித்தன் தொடுத்தான் அஸ்திரமாக சிவனே வந்தார் அன்புடனே, இளையவனுக்கு ஆசிகள் தந்தார் புயலென வந்த பாசுபதாஸ்த்திரம், புறப்பட்ட வழியே திரும்பியது சிவனை நினைத்து, அஸ்த்திரம் தொடுத்தும் சிவன் அருள் கிடைக்காமல் கலங்கி நின்றான் நாராயணாஸ்திரம் பகைவரை அழிக்கும் அது சேஷ நாகத்தை என்ன செய்யும் லக்ஷ்மணன் குணவான், என்றாலும் பலவான் அண்ணல் ராமனின் இளையோன் அச்சமில்லாத மனம் உடையோன் லக்ஷ்மணன் சக்தியை அறிந்ததும் திகைத்தான் தவித்தான், இந்திரஜித்தன் மாயமானான்
Writer(s): Ravindra Jain Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out